எப்பிறப்பிலும் முத்தரையர் பிறப்பே முதற்பிறப்பு. சிவனுக்கே கண் கொடுத்த கண்ணப்பர் குல முத்தரையர்கள் நாங்களடா!

GOUNDAMANI MUTHARAIYAR

கவுண்டமணி முத்தரையர்
பிறந்த இடம்:வல்லகொண்டாபுரம்
கோயம்புத்தூர்

பிறந்த நாள்:
1939 மார்ச் 18

பெற்றோர்கள்:
கருப்பையா
அன்னம்மா தம்பதிகள்

கவுண்டமணி அவர்கள், தமிழகத்தின் தலைச்சிறந்த நகைச்சுவை நடிகர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார்.கரகாட்டக்காரன்’, ‘சின்னக்கவுண்டர்’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘மேட்டுக்குடி’, ‘நடிகன்’, ‘மன்னன்’, ‘இந்தியன்’, ‘நாட்டாமை’, ‘மாமன் மகள்’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘முறைமாமன்’, ‘சூரியன்’, ‘சின்னத்தம்பி’, ‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’, ‘ஜென்டில்மேன்’, ‘ஜெய்ஹிந்த்’, ‘வரவு எட்டணா செலவு பத்தணாஎன மேலும் பல திரைப்படங்களில், இவர் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன. சுமார் 750 திரைப்படங்களில் நடித்துள்ள இவர், ‘ராஜா எங்க ராஜா’, ‘பிறந்தேன் வளர்ந்தேன்உள்ளிட்ட பன்னிரெண்டு திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேலும், செந்திலுடன் இணைந்து, சுமார்450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர்களுடைய கூட்டணி, ஹாலிவுட்டின்லாரல்-ஹார்டிஜோடிக்கு இணையானவர்கள் எனப் புகழப்பட்டது. இவர் நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா’ (வைதேகி காத்திருந்தால்), ‘அமாவாசை’ (புதிய வார்ப்புகள்), ‘விஷமுருக்கி வேலுசாமி’ (மண்ணுக்கேத்த பொண்ணு), ‘ஐடியா மணி’ (மை டியர் மார்த்தாண்டன்), ‘அஞ்சாத சிங்கம் மருதுபாண்டி’ (வரவு எட்டணா செலவு பத்தணா) போன்ற திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், பல குணச்சித்திரக் கதாபத்திரங்களை ஏற்று நடித்து, புகழின் உச்சியை அடைந்த கவுண்டமணியின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.
ஆரம்ப வாழ்க்கை;
ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்துவந்த கவுண்டமணி அவர்கள், நாடகங்களில் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, நாடக நடிப்பில் பெயர் பெற்று விளங்கினார். அதில் ஒரு நாடகத்தில் அவர் ஏற்று நடித்த ஊர் கவுண்டர்என்ற பாத்திரம் மிகவும் பிரபலமானதால்,அன்று முதல் அவரை கவுண்டமணிஎன அழைக்கத் துவங்கினர்.
தமிழ் சினிமாவின் பயணம்:
தன்னுடைய இருபத்தி ஆறாவது வயதில், நாடக உலகில் இருந்து சினிமா உலகத்திற்கு முதன் முதலாக கால்பதித்த கவுண்டமணி அவர்கள், தொடக்கக் காலத்தில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தார். 1976 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த 16 வயதினிலேதிரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ரஜினிகாந்த் அவர்கள் கூறும் இதெப்படி இருக்கு…?” என்ற வசனத்திற்கு, கவுண்டமணி பேசும் பத்த வெச்சுட்டியே பரட்டைஎன்ற டயலாக் ரசிகர்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டது. தாம் நடித்த நான்காவது படத்திலேயே, தன்னுடைய தனித்துவமான நடிப்புத் திறமையை உலகத்திற்கு வெளிபடுத்திய அவர், பின்னர் தமிழ் சினிமாவில் மற்றுமொரு நகைச்சுவை நடிகராக செந்திலுடன் இணைந்து, பல நகைச்சுவைக் காட்சிகளை அமைத்து பெரும் வெற்றிக்கண்டார். குறிப்பாக சொல்லப்போனால், எண்ணற்ற திரைப்படங்களில் இணைந்து நடித்த கவுண்டமணி-செந்தில் என்ற கூட்டணி படிப்படியாக பல வெற்றிப் படிகளில் கால்பதித்து, தமிழ் திரைப்படங்களில் ஒரு முக்கிய சக்தியாகவே மாற ஆரம்பித்துவிட்டது. செந்திலுடன் இவர் இணைந்து நடித்த அனைத்து திரைப்படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக கரகாட்டக்காரன்திரைப்படத்தில் வந்த வாழைப்பழம் காமெடி’, ‘வைதேகி காத்திருந்தால்திரைப்படத்தில்ஏண்டா எப்ப பாத்தாலும் எருமச் சானிய மூஞ்சில அப்புண மாதிரியே திரியிற’, ‘நாட்டாமைதிரைப்படத்தில் இந்த டகால்டி தானே வேணாங்கிறது’, ‘டேய் தகப்பா’,சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் ஆத்தா! வாய மூடு ஆத்தா! குழந்தபய பயப்புடுறான்என மேலும் பல திரைப்படங்களில் வெளிவந்த நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் மறக்கமுடியாத நகைச்சுவைப் பதிவுகளாக இருந்து வருகிறது.



அதிலும், 1989 ஆம் ஆண்டு கங்கை அமரனின் இயக்கத்தில் வெளியான கரகாட்டக்காரன்திரைப்படத்தில் வாழைப்பழம்காமெடி மிகவும் புகழ்பெற்ற நகைச்சுவைக் காட்சியாக முத்திரைப் பதித்தது. மேலும் நாராயணா இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா சாமிமற்றும் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ (சூரியன்), ‘அடங்கொப்பா இது உலக மகா நடிப்புடா சாமி’ (மாமன் மகள்), போன்றவை சினிமா உலகம் இருக்கும் வரை தமிழ்த் திரைப்பட ரசிகர்களிடையே என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், மேன்மை பொருந்திய குணச்சித்திர கதாபத்திரங்களிலும், பல திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல், ‘இவர் ராஜா எங்க ராஜா’, ‘பிறந்தேன் வளர்ந்தேன்உள்ளிட்ட பன்னிரெண்டு திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

No comments:

Post a Comment